Enable Javscript for better performance
நாளை சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நாளை சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க் கூட்டம்

    By திருவண்ணாமலை  |   Published on : 17th April 2015 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை (ஏப்.18) சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க் கூட்டம் நடைபெறுகிறது.

    சமையல் எரிவாயு விநியோகத்தை சீர்படுத்தவும், வாடிக்கையாளர்களின் குறைகளைத் தீர்க்கவும் திருவண்ணாமலை வருவாய் கோட்ட அளவிலான குறைதீர்க் கூட்டம் திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

    கூட்டத்துக்கு கோட்டாட்சியர் தலைமை வகிக்கிறார். இதில், திருவண்ணாமலை வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். எனவே, வாடிக்கையாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம் என்று, கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai