Enable Javscript for better performance
பொதுமக்களுக்கு இடையூறு:புரோட்டா மாஸ்டர்கள் கைது- Dinamani

சுடச்சுட

    

    பொதுமக்களுக்கு இடையூறு:புரோட்டா மாஸ்டர்கள் கைது

    By செங்கம்,  |   Published on : 17th April 2015 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கம் துக்காப்பேட்டை பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக, புரோட்டா மாஸ்டர்கள் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    செங்கம் துக்காப்பேட்டை பகுதியில் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையூறாக இரவு நேரத்தில் உணவு விடுதிகள் நடைபெறுவதாகச் செங்கம் காவல் நிலையத்துக்கு புகார்கள் வந்தன.

    அதன்பேரில், செங்கம் டிஎஸ்பி சுந்தரமூர்த்தி தலைமையில் போலீஸார் புதன்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, செங்கம் துக்காப்பேட்டை பகுதியில் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளும் இடையூறாக ஓட்டல் நடத்திய புரோட்டா மாஸ்டர்களான செங்கம் பகுதியை சேர்ந்த குமார் (28), பாபு (35), பாஷா (26), திருநாவுக்கரசு (35) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai