Enable Javscript for better performance
மாவட்ட அளவில் சதுரங்கப் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்ட சதுரங்க சங்கத்தின் சார்பில் 2015-ஆம் ஆண்டுக்கான மாவட்ட சதுரங்க தெரிவுப் போட்டி தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வரும், 18,19 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன.

    சனிக்கிழமை நடைபெறும் போட்டியில் 7 வயதுக்குள்பட்டோர் பிரிவில் 1.1.2008-க்குப்பின் பிறந்தவராகவும், 11 வயதுக்குள்பட்டோர் பிரிவில் 1.4.2004-க்குப்பின் பிறந்தவராகவும், 15 வயதுக்குள்பட்டோர் பிரிவில் 1.1.2000-க்குப்பின் பிறந்தவராக இருக்க வேண்டும்.

    ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டிகளில் 9 வயதுக்குள்பட்டோர் பிரிவில் 1.1.2006-க்குப்பின் பிறந்தவராகவும், 13 வயதுக்குள்பட்டோர் பிரிவில் 1.1.2002 -க்குப்பின் பிறந்தவராகவும், 17 வயதுக்குள்பட்டோர் பிரிவில் 1.1.1998-க்குப்பின் பிறந்தவராகவும் இருக்கவேண்டும்.

    போட்டிகளில் கலந்து கொள்ள திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்தவர்கள் பங்கேற்கலாம்.

    மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் மே மாதம் 16-ஆம் தேதி மதுரையிலும் (9 வயதுக்குள்பட்டோர் பிரிவு) , 22.5.2015-ஆம் தேதியன்று நாகப்பட்டினத்தில் (11 வயதுக்குள்பட்டோர் பிரிவு) நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்வர்.

    போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ள நபர்கள் திருவண்ணாமலை மாவட்ட சதுரங்க சங்கத்தையும், தண்டராம்பட்டு "கிங்ஸ் செஸ் அகாடமி'யையும் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு செல்லிடப்பேசி எண்கள் 9361110409, 9444167490 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை போட்டி நடத்தும் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai