Enable Javscript for better performance
31 பள்ளி செல்லாக் குழந்தைகள் கண்டுபிடிப்பு- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறு வட்டார வள மையம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பள்ளிசெல்லாக் குழந்தைகள் பற்றிய கணக்கெடுப்பில், 31 குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருந்தது கண்டறியப்பட்டது.

    திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் அ.புகழேந்தி உத்தரவின் பேரில், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ப.ஷண்முகப்பிரியா தலைமையில் செய்யாறு ஒன்றியத்திற்குள்பட்ட 245 குடியிருப்பு பகுதிகள், திருவத்திபுரம் நகராட்சியைச் சேர்ந்த 27 வார்டுகளில் கல்வி அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தினர்.

    அப்போது 31 குழந்தைத் தொழிலாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

    அவர்களை வரும் கல்வியாண்டில் அருகில் உள்ள பள்ளியில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மேலும், ஏப்ரல்,மே ஆகிய மாதங்களில் நடைபெற உள்ள கணக்கெடுப்புப் பணியில் 6 முதல் 14 வயது வரை உள்ள பள்ளி செல்லாக் குழந்தைகள், புலம் பெயர்ந்த வெளி மாநில, வெளிமாவட்ட குழந்தைகளையும் கண்டறியும் பணி அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடைபெறவுள்ளது.

    இந்தத் கணக்கெடுப்புப் பணிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று, அனைவருக்கும் கல்வி இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai