Enable Javscript for better performance
5-ஆம் ஆண்டு லட்ச தீப பெருவிழா- Dinamani

சுடச்சுட

    

    தண்டராம்பட்டு, மயிலாடும் மலையில் உள்ள ஸ்ரீ துக்காராம் சன்னதியில் லட்ச தீப பெருவிழா நடைபெற்றது.

    சதக்குப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட க.உண்ணாமலைபாளையத்தில், மயிலாடும் மலை உள்ளது.

    இந்த மலையில் ஸ்ரீ துக்காராம் தாசர் சன்னதியில் 5-ஆம் ஆண்டு லட்சதீப பெருவிழா தமிழ் வருடப் பிறப்பான செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    முன்னதாக அன்று காலை ஸ்ரீ துக்காராம் தாசர் சன்னதியில் அபிஷேக பூஜைகளும், லட்சதீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

    விழாவைத் தொடர்ந்து மாலை 27 நட்சத்திரப் படிகளுக்கு கலச பூஜைகள் நடைபெற்றன.

    விழாவில் கணபதி பூஜை, கணபதி ஹோமம், துக்காராம் தாசருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, 1,008 வேள்விபூஜைகள், முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள், அன்னதானம், புற்றுக்கு பாலாபிஷேகம், ஊரணிப் பொங்கல், 1,008 மரக்கன்றுகள் வழங்குதல், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நிகழ்ச்சியில் ஆர்.அழகம்மாள், கோயில் நிர்வாகிகள் கே.தருமன், டி.நாட்டான், பி.சாமிநாதன், சிறப்பு விருந்தினராகத் திரைப்பட நடிகர் எம்.ஷக்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஷக்தி ரசிகர் நற்பணி இயக்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.கே.முனுசாமி, ஊராட்சித் தலைவர் கே.கருப்பகவுண்டர், ஊராட்சி முன்னாள் தலைவர் டி.பொன்னம்மாள் தனபால்,

    ஊராட்சிச் செயலாளர் பி.சாமிநாதன், ஒன்றியக் குழு உறுப்பினர்

    சத்தியா வெங்கடேசன், ஊராட்சித் துணைத் தலைவர் எம்.வெங்கடேசன், எம்.ராஜேந்திரன் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai