சுடச்சுட

    

    சாமை பயிரிட்டு விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என வேளாண்மைத் துறையின் உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி கூறினார்.

    ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தில், பயிரிடப்பட்ட நிலத்தை அண்மையில் அவர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:

    முதுகு வலிக்கு சாமை ஒரு நல்ல உணவு என்பதால், சாமை பயிருக்கு எப்போதும் சந்தையில் வரவேற்பு உண்டு. எனவே, இதைப் பயிரிட்டால் எப்போதும் சந்தை வாய்ப்பு உண்டு.

    சாமைப் பயிர் சாகுபடிக்கு ஏற்ற மாதம் பிப்ரவரி ஆகும். ஒரு ஏக்கருக்கு விதையளவு 5 கிலோ தேவைப்படும். கலப்பையைப் பயன்படுத்தி, வரிசையில் விதைப்பு செய்யலாம்.

    ஒரு ஏக்கருக்கு 2 டன் தொழு உரத்தை கடைசி உழவின்போது பரப்பு உழவு செய்ய வேண்டும். மேலும், அடியுரமாக ஒரு ஏக்கருக்கு 17.6 கிலோ தழைச் சத்தும், 8.8 கிலோ மணிச் சத்தும் இட வேண்டும்.

    விதைத்த 20-ஆவது நாளில் வரிசைக்கு வரிசை 22.5 செ.மீ இடைவெளியும், செடிக்குச் செடி 7.5 செ.மீ இடைவெளி இருக்கும்படிக் களைய வேண்டும். இப்படிச் செய்வதால் அதிகமாகத் தூர்கள் வரும். கதிர்கள் அதிகம் வரும்.

    இந்தப் பயிரை பொதுவாக எந்த நோயும் தாக்குவதில்லை. குருத்து ஈ சாமையைத் தாக்கி விளைச்சலை மிகவும் பாதிக்கிறது. இப்பூச்சியைக் கட்டுப்படுத்த விதைப்பைத் தள்ளிப் போடாது பருவ மழை தொடங்கிய உடனே விதைக்கலாம் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai