Enable Javscript for better performance
அருணாசலேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    அருணாசலேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடக்கம்

    By திருவண்ணாமலை  |   Published on : 27th January 2015 01:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

    இக் கோயிலின் கும்பாபிஷேகம் 2002 ஜூன் 27 ஆம் தேதி நடந்தது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்போது கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது.

    அதன்படி, கோயிலின் திருப்பணிகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

    முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை கோயில் கொடிமரம் அருகே உள்ள ஸ்ரீசம்பந்த விநாயகர் சன்னிதியில் கலச பிரதிஷ்டை மற்றும் கணபதி ஹோமம் நடைபெற்றது.

    தொடர்ந்து, திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு உண்ணாமுலையம்மன் சன்னிதி எதிரே யாக சாலைப் பூஜைகள் தொடங்கின. யாக சாலைக்கு அருகே 9 யாக மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மேடைகளின் மீது கோயிலின் 9 கோபுரங்களின் உருவப் படம் வரையப்பட்ட 9 அத்தி மரப் பலகைகள் வைத்து சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன.

    பின்னர், யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித நீர், கோயில் கோபுரங்கள் வரையப்பட்டிருந்த 9 பலகைகள் மீது ஊற்றி கோபுரங்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கான பாலாலயப் பூஜைகள் செய்யப்பட்டன.

    பூஜைகளுக்குப் பிறகு கோயில் கோபுரங்கள் வரையப்பட்ட 9 பலகைகளையும் கோயில் சிவாச்சாரியார்கள் எடுத்துச் சென்று கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள நடராஜர் சன்னிதியில் வைத்தனர்.

    ஞாயிறு, திங்கள்கிழமைகளில் நடைபெற்ற யாகசாலைப் பூஜைகளில் வேளாண்மைத் துறை அமைச்சர் அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.முத்தரசி, மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி, கோயில் இணை ஆணையர் இரா.செந்தில்வேலவன், கோயில் கண்காணிப்பாளர் விவேகானந்தன், மேற்பார்வையாளர் துவாரகநாத், மணியம் தியாகராஜன், சுவாமி புறப்பாடு அமீனா அண்ணாமலை உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பாலாலயம் நடைபெற்றதையடுத்து, கோயிலின் 9 கோபுரங்களிலும் திருப்பணிகள் செய்து, வர்ணம் தீட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai