Enable Javscript for better performance
திமுக சார்பில் வீரவணக்க நாள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசி தொகுதி திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் வந்தவாசி தேரடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    மாவட்ட அவைத்தலைவர் கே.ஆர்.சீதாபதி தலைமை வகித்தார். நகரச் செயலர் கோட்டை பாபு வரவேற்றார். மாவட்டச் செயலர் ஆர்.சிவானந்தம், கட்சிப் பேச்சாளர்கள் அத்திப்பட்டு சாம்ராஜ், எம்.எல்.நாதன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    மாவட்ட துணைச் செயலர் எம்.எஸ்.தரணிவேந்தன், முன்னாள் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆர்.நந்தகோபால், ஒன்றியச் செயலர்கள் டி.டி.ராதா, பி.இளங்கோவன், எஸ்.சுரேஷ்கமல், முன்னாள் நகரச் செயலர் லியாகத் பாஷா, ஒன்றிய துணைச் செயலர் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai