Enable Javscript for better performance
தமிழர் திருநாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    மதுரை, ஜன.27: மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் தமிழர் திருநாள் விழா (பொங்கல் விழா)ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

     புரட்சிக் கவிஞர் மன்றம் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு மன்றத் தலைவர் பி.வரதராசன் தலைமை வகித்தார். வைணவ இலக்கிய ஆய்வாளர் ம.பெ.சீனிவாசன், ஓய்வுபெற்ற நீதிபதி இரா.பொன்னுச்சாமி ஆகியோர் கருத்துரையாற்றினர்.

    இதனைத் தொடர்ந்து மணியம்மை பள்ளி மாணவர்கள் புரட்சிக் கவிஞரின் பாடல்களுக்கு நடனமாடினர். மாணவன் கெளசிக் புரட்சிக் கவிஞரின் தலைவாரிச்சூடி எனும் கல்வியின் சிறப்பு குறித்த பாடலைப் பாடினார்.   

     சிறப்பு விருந்தினராக தமிழறிஞர் இரா.இளங்குமரனார் கலந்து கொண்டு பொங்கல் விழா, உழவு, தமிழ்மொழி, இனம் பற்றிய தகவல் குறித்து சிறப்புரையாற்றினார். நிழ்ச்சியில் செயலர் சு.முத்துக்குமார் நன்றி கூறினார். கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai