Enable Javscript for better performance
மதுக் கடையை மூடக்கோரி கிராம சபை தீர்மானம்- Dinamani

சுடச்சுட

    

    மதுக் கடையை மூடக்கோரி கிராம சபை தீர்மானம்

    By திருவண்ணாமலை  |   Published on : 28th January 2015 04:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை, ஜன. 27: கீழ்செட்டிப்பட்டு ஊராட்சியில் பொது மக்கள், பள்ளி மாணவ, மாணவியருக்கு இடையூறாக உள்ள மதுபானக் கடையை மூடக்கோரி கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    திருவண்ணாமலையை அடுத்த கீழ்செட்டிப்பட்டு திரௌபதியம்மன் கோயில் எதிரே நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு, ஊராட்சித் தலைவர் கு.சேட்டு தலைமை வகித்தார். ஒன்றிய அலுவலக மேற்பார்வையாளர் பி.காமராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், இந்திரா நினைவுக் குடியிருப்பு வீடுகளின் பயனாளிகள் மற்றும் பசுமை வீடுகளின் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். தனிநபர் கழிவறை கட்டுவதன் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது.

    மயானப் பாதை அமைத்துத் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையூறாக தண்டராம்பட்டு-திருவண்ணாமலை மெயின் ரோட்டில் உள்ள மதுக்கடையை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில், ஊராட்சி செயலாளர் எஸ்.சுரேஷ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி இயக்குநர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கோவிலூரில்

    ஜவ்வாது மலை ஒன்றியம் கோவிலூர் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார்.

    மண்டல அலுவலர் நாகையா முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன்,துணைவட்டாரவளர்ச்சி அலுவலர் சுகுமார், துணைத் தலைவர் கோமதி,வார்டு உறுப்பினர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தண்டராம்பட்டில்

     தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 47 கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தின விழா நாளில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

    தண்டராம்பட்டு வட்டார வளரச்சி அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவர் டி.ஜானகிராமன் கொடியேற்றினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) மு.சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். இந்நிகழ்ச்சியில் தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

    புத்தூர்செக்கடி, எடத்தனூர் ஆகிய கிராமங்களில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது. கோட்டாட்சியர் ஆர்.உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். தண்டராம்பட்டு வட்டாட்சியர் சா.தனஞ்செயன் வரவேற்றார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) வெ.சிவகுமார், ஊராட்சித் தலைவர்கள் சங்கீதா வீரன் (புத்தூர்செக்கடி), ஆர்.சங்கமித்திரை (எடத்தனூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் 2015-16ஆம் ஆண்டு முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் மற்றும் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் காத்திருப்போர் பட்டியலில் இருந்து பயனாளிகள் தேர்வு, கிராம ஊராட்சியின் வரவு- செலவு அறிக்கை, சத்துணவுத் திட்ட செயல்பாடு, பொது விநியோக கடைகளின் செயல்பாடு, குடிநீர்த் தேவைகள், உள்ளிட்டவை குறித்து சமூகத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்கு கிராம சபையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai