Enable Javscript for better performance
அம்பேத்கர் 125-ஆவது பிறந்த நாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    அம்பேத்கரின் 125-ஆவது பிறந்த நாளையொட்டி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    திமுக: திருவண்ணாமலை நகர திமுக சார்பில், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், நகரச் செயலர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை, நகராட்சிகுழுத் தலைவர் குட்டி க.புகழேந்தி, அனைத்து அமைப்புசாரா தொழிற்சங்கங்களின் மாவட்டத் தலைவர் எ.ஏ.ஆறுமுகம் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அனைத்திந்திய மக்கள் கட்சி: அனைத்திந்திய மக்கள் கட்சி சார்பில் அதன் நிறுவனத் தலைவர் அருள்காந்த், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில், கட்சியின் மாநில துணைச் செயலர் ராஜா, நிர்வாகிகள் சத்தியநாராயணன், சிவா, சரவணன், நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    இதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    ஆரணி

    ஆரணியில் அதிமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு அதிமுக வேட்பாளர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் மாலை அணிவித்தார். நகரச் செயலர் அசோக்குமார், மாவட்ட துணைச் செயலர் டி.கருணாகரன், முன்னாள் எம்எல்ஏ ஜெமினிராமச்சந்திரன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர்கள் க.சங்கர், அ.கோவிந்தராசன், மேற்கு ஆரணி ஒன்றியச் செயலர் வேலு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    திமுக: திமுக சார்பில் மாவட்டச் செயலர் ஆர்.சிவானந்தம், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சிக்கு மாவட்டப் பிரதிநிதி ஆர்.சி.ஆரோன் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ தயாநிதி, நகரச் செயலர் ஏ.சி.மணி, ஒன்றியச் செயலர்கள் அன்பழகன், தட்சிணாமூர்த்தி, மாவட்டப் பிரதிநிதி விண்ணமங்கலம் ரவி, விவசாய அணி நிர்வாகி ஜி.வெங்கடேசன், ரஞ்சித் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    காங்கிரஸ்: காங்கிரஸ் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட துணைத் தலைவர் கப்பல் இ.கங்காதரன் மாலை அணிவித்தார். வட்டாரத் தலைவர்கள் பிரசாத், ராமலிங்கம், நகரத் தலைவர் சம்பந்தம், நிர்வாகி கே.ஆர்.சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    இந்திய குடியரசு கட்சி: இந்திய குடியரசு கட்சி சார்பில் கே.எம்.பக்கிரிசாமி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். விவசாய சங்கத்தைச் சேர்ந்த

    ஜெயபாலன், சங்கர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    செங்கம்

     செங்கம் வட்டார, நகர காங்கிரஸ் கட்சி சார்பில் துக்காப்பேட்டையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாவட்டப் பொருளாளர் மார்கெட் குமார் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்து. மாவட்டச் செயலர் பாரதி, நகரச் செயலர் ஆசைமுசிர்அகமத், வட்டாரத் தலைவர்கள் சுப்பிரமணி, ரங்கன், ரங்கநாதன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    பாமக: இதேபோல், துக்காப்பேட்டையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பாமக வேட்பாளர் வழக்குரைஞர் சி.முருகன் மாலை அணிவித்தார். மாவட்டச் செயலர் ஜெயசங்கர், மாநில இளைஞரணி துணைச் செயலர் சுரேஷ், மாவட்டத் தலைவர் ஏழுமலை, ஒன்றியச் செயலர்கள் பிரபாகரன், முருகன், இனமுரசு, விஜயகாந்த் உள்பட பலர் உடனிருந்தனர்.

    போளூர்

    சேத்துப்பட்டு காங்கிரஸ் அலுவலகத்தில் அம்பேத்கர் உருவப் படத்துக்கு மாவட்டப் பொருளாளர் சத்தியன் மாலை அணிவித்தார். மாவட்ட துணைத் தலைவர் மணவாளன், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் வனமயில் நந்தகுமார், கவுன்சிலர் ரமணிபாய், நகர துணைத் தலைவர்கள் லூக்காஸ், மாரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    விடுதலை சிறுத்தைகள்: போளூரை அடுத்த அத்திமூர், ரெண்டேரிப்பட்டு கூட்டுச்சாலை உள்பட பல்வேறு இடங்களில் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு மாவட்டச் செயலர்  செல்வம் மாலை அணிவித்தார். தொகுதிச் செயலர் பொன்.உதயகுமார் மற்றும் விடுதலைச் சிறுத்தை கட்சியினர் உடனிருந்தனர்.

    வந்தவாசி: வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு  அதிமுக சார்பில் வந்தவாசி (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் வி.மேகநாதன் மாலை அணிவித்தார். தொகுதிச் செயலர் கே.பாஸ்கர் ரெட்டியார், எம்ஜிஆர் மன்ற மாவட்டத் தலைவர் ஜெ.பாலு முதலியார், ஒன்றியச் செயலர்கள் டி.வி.பச்சையப்பன், எம்.கே.ஏ.லோகேஸ்வரன், ஆர்.அர்ஜூனன், மாவட்ட இளைஞரணிச் செயலர் ஜெ.ராஜேஷ்கண்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்திய குடியரசு கட்சி: இந்திய குடியரசு கட்சி சார்பில் மாநில பொதுச்செயலர் சி.செங்குட்டுவன்மாலை அணிவித்தார். மாவட்டத் தலைவர் எம்.மோகன், மாநில செயற்குழு உறுப்பினர் ஜெ.டிக்ரூஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தமிழ்நாடு அரசு எஸ்.சி.,எஸ்.டி. அலுவலர் நலச்சங்கம் சார்பில் மாவட்டச் செயலர் ஈ.தசரதன் மாலை அணிவித்தார். அரசு வழக்குரைஞர் பாஸ்கரன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலச் செயலர் எம்.நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், பல்வேறு கட்சியினர், தலித் அமைப்பினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    டாக்டர் அம்பேத்கர் விடுதலை முன்னணி சார்பில் வந்தவாசி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை-1 முன் நடைபெற்ற விழாவில் அம்பேத்கர் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் டாக்டர் அம்பேத்கர் விடுதலை முன்னணி தலைவர் முருகன், செயலர் திருமால், பொருளர் குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தண்டராம்பட்டு

    தண்டராம்பட்டிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு பகுஜன் சாமஜ் கட்சி மாவட்டப் பொறுப்பாளரும், வழக்குரைஞருமான கே.சந்திரசேகர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

    இதேபோல், தண்டராம்பட்டைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினர், இளைஞர்கள் சார்பாகவும் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai