Enable Javscript for better performance
அரசு ஊழியர் வீட்டில் 25 பவுன், ரூ.40 ஆயிரம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    அரசு ஊழியர் வீட்டில் 25 பவுன், ரூ.40 ஆயிரம் திருட்டு

    By திருவண்ணாமலை  |   Published on : 15th April 2016 07:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலையில் அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் தங்க நகைகள், ரூ.40 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    திருவண்ணாமலை - போளூர் சாலை, 5-ஆவது தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி. சென்னையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை செய்கிறார். இவரது மனைவி சுலோச்சனா. இவர், உறவினர் வீட்டு திருமணத்துக்குச் செல்வதற்காக வங்கிப் பெட்டகத்தில் இருந்த 25 பவுன் தங்க நகைகளை சில தினங்களுக்கு முன்பு எடுத்து வந்து வீட்டில் வைத்திருந்தார்.

    இந்நிலையில், புதன்கிழமை கோயிலுக்குச் சென்ற சுலோச்சனா, சிறிது நேரம் கழித்து மீண்டும் வீடு திரும்பினார். பின்னர், வீட்டின் முன் பக்க கதவை திறந்து உள்ளே சென்றபோது, பின்பக்க கதவும், பீரோவும் திறந்திருந்தது தெரியவந்தது. பீரோவைப் பார்த்தபோது அதில் வைத்திருந்த 25 பவுன் தங்க நகைகள், ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து, திருவண்ணாமலை நகர போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து, போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai