Enable Javscript for better performance
பெரும்பாலான ஏரிகள் வறண்டு கிடக்கின்றன- Dinamani

சுடச்சுட

    

    கீழ்பென்னாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளி ஒன்று உள்ளது. வேறு எந்த அரசு கலைக் கல்லூரியோ, பொறியியல் கல்லூரிகளோ இல்லை. எனவே, கிராமப்புற மாணவ-மாணவிகளின் நலன் கருதி அரசு பொறியியல் கல்லூரியை இந்தத் தொகுதியில் திறக்க வேண்டும் என்பது பெரும்பாலான தொகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    ஏரிக் கால்வாய்கள் செப்பனிடப்படுமா? டிசம்பரில் பெய்த பலத்த மழைக்குப் பிறகும் தொகுதியில் உள்ள பெரும்பாலான ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. இதற்குக் காரணம் ஏரிகளுக்கான நிர்வரத்துக் கால்வாய்கள் காணாமல் போனதுத்தான். எனவே, கீழ்பென்னாத்தூரை அடுத்த கருங்காலிக்குப்பம் ஏரியின் நீர்வரத்துக் கால்வாய்களை சீரமைக்க வேண்டும்.

    இந்த ஏரி நிரம்பினால், கருங்காலிக்குப்பம், மேட்டுப்பாளையம், செம்பேடு, சத்தியமங்கலம் உள்ளிட்ட 20 கிராமங்களில் விவசாயம் செழிக்கும். கொளத்தூர், வேடநத்தம், மானாவரம் உள்பட சுமார் 30 கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்கின்றனர் தொகுதி விவசாயிகள்.

    திருவண்ணாமலை-விழுப்புரம் மாவட்ட ஏரிகளுக்கு சாத்தனூர் அணையில் இருந்து, நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது இந்த தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. 2011 தேர்தல் பிரசாரத்தின்போது நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்துவேன் என்று எம்எல்ஏ ஏ.கே.அரங்கநாதன் வாக்குறுதி கொடுத்தார். ஆனால், இதற்கான எந்தவித நடவடிக்கையும் அவர் எடுக்காததால் சுமார் 5 ஆயிரம் ஹெக்டர் விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறிவிட்டன.

    இதுதவிர, விவசாயிகள் நிறைந்த இந்தத் தொகுதியில் தொழிற்சாலைகளைத் திறக்க வேண்டும். கீழ்பென்னாத்தூர், வேட்டவலம் பகுதிகளை இணைக்கும் சாலைகள் குறுகலாக உள்ளன. இந்தச் சாலைகளை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டும்.

    கீழ்பென்னாத்தூரில் மூடப்பட்டுள்ள உழவர் சந்தையை மீண்டும் திறக்க வேண்டும். தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் துரிஞ்சலாற்று திட்டப்பணியை விரைவுபடுத்த வேண்டும். திருவண்ணாமலை-வேலூர் சாலையில் உள்ள நாயுடுமங்கலத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் திறக்க வேண்டும்.

    திருவண்ணாமலை-அவலூர்பேட்டை சாலையில் உள்ள மங்கலம் கிராம பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும். தொகுதியின் மிகப் பெரிய ஊராட்சியான மங்கலம் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தொகுதி மக்களின் நீண்ட நாள் தீர்க்கப்படாத கோரிக்கைகளாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    தொகுதியின் முதல் எம்எல்ஏ

    கீழ்பென்னாத்தூர் தொகுதி உருவாக்கப்பட்ட பிறகு முதல் முதலாக 2011-ல் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே.அரங்கநாதன் 83 ஆயிரத்து 663 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மேலும், தொகுதியின் முதல் எம்எல்ஏ என்ற அந்தஸ்தையும் அவர் பெற்றார்.

    இவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட கு.பிச்சாண்டி, 79 ஆயிரத்து 582 வாக்குகள் எடுத்து தோல்வியைத் தழுவினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai