Enable Javscript for better performance
கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்- Dinamani

சுடச்சுட

    

    கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

    By திருவண்ணாமலை  |   Published on : 15th April 2016 07:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சமுதாய நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை கடைசி நாள் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    நமது நாட்டுக்கு நற்பெயர், புகழை ஈட்டித் தரும் வகையில், சமுதாய நல்லிணக்கத்துடனும், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்கும்விக்கும் வகையிலும் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு இந்திய அரசு ஆண்டுதோறும் கபீர் புரஸ்கார் விருது வழங்குகிறது.

    அதன்படி, 2015-16ஆம் ஆண்டுக்கான கபீர் புரஸ்கார் விருதுக்கான விண்ணப்பங்கள் ஏற்கெனவே வரவேற்கப்பட்டிருந்தன. இந்நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் வெள்ளிக்கிழமை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் விருது பெற தகுதியானோர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான w‌w‌w.‌s‌d​a‌t.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உறுப்பினர் - செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நெ.116ஏ, ஈ.வே.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நேரு பூங்கா, சென்னை - 600 084 என்ற முகவரிக்கு வெள்ளிக்கிழமை மாலைக்குள் சேர்க்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை 04175-233169 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai