Enable Javscript for better performance
தமிழ்ப் புத்தாண்டின் அபூர்வ நிகழ்வு: திருநேர் அண்ணாமலையார் கோயிலில் மூலவர் மீது விழுந்த சூரிய ஒளி- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்ப் புத்தாண்டின் அபூர்வ நிகழ்வு: திருநேர் அண்ணாமலையார் கோயிலில் மூலவர் மீது விழுந்த சூரிய ஒளி

    By திருவண்ணாமலை  |   Published on : 15th April 2016 03:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்ப் புத்தாண்டின் அபூர்வ நிகழ்வாக திருவண்ணாமலை திருநேர் அண்ணாமலையார் கோயிலில் மூலவர் மீது வியாழக்கிழமை காலை சூரிய ஒளிக்கதிர் விழுந்தது.

    பஞ்சபூதங்களில் அக்னி தலமான திருவண்ணாமலையில் 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதை உள்ளது. இந்தப் பாதையில் அஷ்ட லிங்க சன்னிதிகள் உள்ளிட்ட பல்வேறு கோயில்கள் உள்ளன. மலையே சிவனாக வணங்கப்படும். திருவண்ணாமலை மலைக்கு நேர் எதிரே கிரிவலப் பாதையில் திருநேர் அண்ணாமலையார் கோயில் உள்ளது.

    இந்தக் கோயிலில் உள்ள மூலவர் மீது தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் மட்டும் சூரிய ஒளிக்கதிர் விழுவது வழக்கம். அதன்படி, வியாழக்கிழமை காலை 7 மணிக்கு மலை உச்சியில் தோன்றிய சூரியஒளிக் கதிர், திருநேர் அண்ணாமலையார் கோயில் மூலவர் மீது விழுந்தது.

    தொடர்ந்து, 5 நிமிடங்களுக்கும் மேலாக இந்த நிகழ்வு நடைபெற்றது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் இந்த அபூர்வ நிகழ்வைக் காண ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai