Enable Javscript for better performance
தொகுதி அறிமுகம்: கீழ்பென்னாத்தூர்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம் (தனி), கலசப்பாக்கம், போளூர், ஆரணி, வந்தவாசி (தனி), செய்யாறு உள்ளிட்ட 8 சட்டபேரவைத் தொகுதிகள் உள்ளன.

    இவற்றில், திருவண்ணாமலை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலைக்கு மிக அருகில் உள்ள தொகுதி என்ற பெருமை கீழ்பென்னாத்தூர் தொகுதிக்கு உண்டு.

    1952-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை திருவண்ணாமலை சட்டபேரவைத் தொகுதியில் கீழ்பென்னாத்தூர் ஒன்றியப் பகுதிகள் இடம்பெற்றிருந்தன.

    2011-ல் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பின்போது, கீழ்பென்னாத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய தொகுதி உருவாக்கப்பட்டது.

     

    எல்லைகள்

    கீழ்பென்னாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியின் கிழக்கே விழுப்புரம் மாவட்ட கிராமங்களும், மேற்கே திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராமங்களும், வடக்கே கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராமங்களும், தெற்கே விழுப்புரம் மாவட்ட கிராமங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.

     

    பகுதிகள்

    இந்தத் தொகுதியில் கீழ்பென்னாத்தூர், வேட்டவலம் உள்ளிட்ட 2 பேரூராட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    மேலும், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 20 கிராம ஊராட்சிகள், கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 45 கிராம ஊராட்சிகள், துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள 47 ஊராட்சிகளில் துர்க்கைநம்மியந்தல் ஊராட்சியைத் தவிர மீதமுள்ள 46 கிராம ஊராட்சிகள் இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன.

     

    வாக்காளர்கள்

    ஆண் 1,16 , 161

    பெண்  1, 17, 942

    திருநங்கைகள் 1

     

    வாக்குச் சாவடிகள்

    மொத்தம் 285 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

     

    தேர்தல் நடத்தும் அலுவலர்

    தேர்தல் நடத்தும் அலுவலராக திருவண்ணாமலை மாவட்ட கலால் உதவி ஆணையர் எஸ்.பானு நியமிக்கப்பட்டுள்ளார்.

    தொடர்பு எண்: 9445074597.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai