Enable Javscript for better performance
தொகுதி ஓர் அறிமுகம்: காட்பாடி - Dinamani

சுடச்சுட

    

    * தொகுதி பெயர் காட்பாடி

    * தொகுதி வரிசை எண் 40

    * சிறப்புகள்

    வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய ரயில்வே சந்திப்பு இருக்கும்  காட்பாடியில் டெல் வெடிமருந்து தொழிற்சாலை உள்ளது. இங்கு கல்லூரிகள் அதிகம், பீடி சுற்றுதலும், விவசாயமும் முக்கியமான தொழில்கள்.

     இந்தத் தொகுதியில் வன்னியர் சமூகத்தவர் 40 சதவிகிதம், முதலியார் 20, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 10, இதர வகுப்பினர் 30 சதவிகிதம் பேர் வசிக்கின்றனர்.

     தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் கே.துரைமுருகன் (திமுக) கட்சித் தலைமைக்கு நெருக்கமானவர்; அக்கட்சியின் முதன்மைச் செயலாளர். அவர் தொடர்ந்து களம் இறங்குவதால் விஐபி தொகுதியாக உள்ளது.

     

     

    * தொகுதியில் அடங்கியுள்ள  பகுதிகள்

    குடியாத்தத்திலிருந்து பிரிக்கப்பட்டு 1962-ஆம் ஆண்டு காட்பாடி தொகுதி உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் ஆரம்பத்தில் காட்பாடி, கே.வி.குப்பம் ஒன்றியங்கள் இடம் பெற்றிருந்தன.

     2011 தொகுதி மறுசீரமைப்பின்போது கே.வி.குப்பம் ஒன்றியம், குடியாத்தம் ஒன்றியத்தில் சில பகுதிகள், காட்பாடி ஒன்றியத்தில் உள்ள வஞ்சூர், ஜாப்ராப்பேட்டை ஆகிய ஊராட்சிகளை இணைத்து கே.வி.குப்பம் புதிய தொகுதி உருவாக்கப்பட்டது.

     அப்போது, காட்பாடி தொகுதியில் வாலாஜா வட்டத்தில் உள்ள வசூர், பல்லேரி, கொண்டகுப்பம், மருதம்பாக்கம், ஏகாம்பரநல்லூர், சீக்கராஜபுரம், முகுந்தராயபுரம், கத்தாரிகுப்பம், லாலாப்பேட்டை ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்பட்டன. தவிர வேலூர் மாநகராட்சியில் 15 வார்டுகள், தண்டலம், கிருஷ்ணாபுரம் முதல் பொன்னை, தெங்கால் ஊராட்சி வரை தொகுதி எல்லை பரந்து விரிந்து கிடக்கிறது.

     

    * வாக்காளர்கள்

    ஆண்கள் :    1,11, 183

    பெண்கள் :     1,16, 051

    திருநங்கைகள் : 16

    மொத்தம் :     2,27,250

     

     

    * இதுவரை எம்எல்ஏ க்கள்....

    1962- பி.ராஜகோபால் நாயுடு (காங்கிரஸ்)

    1967- ஜி.நடராஜன் (திமுக)

    1971- கே.துரைமுருகன் (திமுக)

    1977- எம்.ஏ.ஜெயவேலு (அதிமுக)

    1980- என்.ஏ.பூங்காவனம்  (இந்திய கம்யூனிஸ்ட்)

    1984- ஜி.ரகுபதி (அதிமுக)

    1989- கே.துரைமுருகன் (திமுக)

    1991- கே.எம்.கலைச்செல்வி (அதிமுக)

    1996- கே.துரைமுருகன் (திமுக)

    2001- கே.துரைமுருகன் (திமுக)

    2006- கே.துரைமுருகன் (திமுக)

    2011- கே.துரைமுருகன் (திமுக)

     

     

    * தேர்தல் நடத்தும் அலுவலர்/  தொடர்பு எண்

    கு.மதிவாணன், தனி துணை ஆட்சியர் (முத்திரை கட்டணம்) 75984 90865

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai