Enable Javscript for better performance
பாமக வேட்பாளர் அறிமுகம், ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பாமக வேட்பாளர் அறிமுகம், ஆலோசனைக் கூட்டம்

    By தண்டராம்பட்டு  |   Published on : 15th April 2016 07:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தண்டராம்பட்டில் பாமக வேட்பாளர் அறிமுகம், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    செங்கம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி பாமக வேட்பாளராக சி.முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தண்டராம்பட்டு வட்டத்தைச் சேர்ந்த பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தண்டராம்பட்டிலிருந்து தானிப்பாடி செல்லும் சாலையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் இரா.ஜெயசங்கர் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் த.ஏழுமலை, முன்னாள் மாவட்டச் செயலர் இல.பாண்டியன், மாவட்ட அமைப்புச் செயலர் கு.சேட்டு, மாநில இளைஞரணி துணைச் செயலர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர், வேட்பாளர் சி.முருகன் அறிமுகம் செய்யப்பட்டார்.

    கூட்டத்தில், வரும் மே 16-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் செங்கம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி பாமக வேட்பாளராக போட்டியிடும் சி.முருகனுக்கு தண்டராம்பட்டு வட்டத்தைச் சேர்ந்த கிராமங்களில் அதிகப்படியான வாக்குகளை சேகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இதில், தண்டராம்பட்டு வட்டத்தைச் சேர்ந்த அ.கோவிந்தன், த.ரங்கநாதன், ஜெயா தண்டபானி, ரத்தினம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai