Enable Javscript for better performance
புத்தாண்டு: திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம்- Dinamani

சுடச்சுட

    

    புத்தாண்டு: திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம்

    By திருவண்ணாமலை  |   Published on : 15th April 2016 07:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ் புத்தாண்டையொட்டி, திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் வியாழக்கிழமை கிரிவலம் வந்தனர்.

    திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா, சித்ரா பெளர்ணமி மற்றும் இதர பெளர்ணமி நாள்கள், முக்கிய விழா நாள்களில் பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். அதன்படி, தமிழ் புத்தாண்டு தினமான வியாழக்கிழமை (ஏப்ரல் 14) அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரமுள்ள கிரிவலப் பாதையை வலம் வந்தனர்.

    கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்க சன்னதிகள், ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனை வழிபட்டு மகிழ்ந்தனர். காலை மற்றும் மாலை வேளைகளில் கிரிவலம் வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

    திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் காலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai