Enable Javscript for better performance
போளூர் தொகுதியில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    போளூர் தொகுதியில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான அ.ஞானசேகரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

    போளூர் தொகுதி தேர்தல் பறக்கும்படையினர், நிலை கண்காணிப்புக் குழுவினரின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் அ.ஞானசேகரன் பேசியது:

    தேர்தல் பறக்கும்படையினர் வாகனங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பாரபட்சமின்றி சோதனை செய்ய வேண்டும். சந்தேகிக்கும் வாகனங்களை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.

    மேலும், வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். வருவாய் அலுவலர் பழனி, தேர்தல் நடத்தும் அலுவலர் சாவித்திரி, வட்டாட்சியர் புவனேஸ்வரி, மண்டல துணை வட்டாட்சியர் மணி மற்றும் தேர்தல் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai