Enable Javscript for better performance
போளூர் வேட்பாளர் தேர்வில் திமுகவினர் அதிருப்தி- Dinamani

சுடச்சுட

    

    போளூர் வேட்பாளர் தேர்வில் திமுகவினர் அதிருப்தி

    By போளூர்  |   Published on : 15th April 2016 07:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போளூர் சட்டப்பேரவைத் தொகுதியில் சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றியச் செயலர் சி.ஏழுமலை வேட்பாளராக அறிவிக்கப்படாததால், அதிருப்தியடைந்த அந்த ஒன்றிய திமுகவினர் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில், போளூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு போளூர் ஒன்றிய திமுக செயலர் கே.வி.சேகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இதனால், அதிருப்தியடைந்த அந்தக் கட்சியின் சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றியச் செயலர் சி.ஏழுமலையின் ஆதரவாளர்கள், இதுதொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும் எனவும், சி.ஏழுமலை தனித்து சுயேச்சையாக போட்டியிட வேண்டும் எனவும் கூறி போளூரிலுள்ள தனியார் கல்லூரி முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து சி.ஏழுமலை கூறியது:

    கடந்த 30 ஆண்டுகளாக திமுகவில் உள்ளேன். ஒவ்வொரு முறையும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதாகக் கூறிவிட்டு, கூட்டணி கட்சிக்கு தொகுதியை ஒதுக்குவது அல்லது சீட்டு தராமல் தவிர்ப்பது போன்ற முடிவால் ஏமாற்றம் ஏற்படுகிறது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai