Enable Javscript for better performance
அருணாசலேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு: திரளான பக்தர்கள் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    அருணாசலேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு: திரளான பக்தர்கள் பங்கேற்பு

    By திருவண்ணாமலை  |   Published on : 01st August 2016 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆயிரம் கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, தங்கக் கொடிமரம் எதிரே உள்ள நந்தி, மூலவர் சன்னதி எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் பல்வேறு பகுதிகளில் உள்ள 8-க்கும் மேற்பட்ட நந்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

    மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பல்வேறு பூஜைப் பொருள்களைக்கொண்டு நடத்தப்பட்ட பிரதோஷ பூஜையில் பல ஆயிரம் பக்தர்கள் கலந்துகொண்டனர். பின்னர், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகர், கோயில் மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    மற்ற கோயில்களில்...: இதேபோல, ஆரணி, செய்யாறு, வந்தவாசி, போளூர், கலசப்பாக்கம், தண்டராம்பட்டு, செங்கம் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களிலும் ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai