Enable Javscript for better performance
உறவுகள், பண்பாட்டை சொல்லிக் கொடுக்கும் மொழி தமிழ்: எ.வ.வேலு எம்எல்ஏ பேச்சு- Dinamani

சுடச்சுட

    

    உறவுகள், பண்பாட்டை சொல்லிக் கொடுக்கும் மொழி தமிழ்: எ.வ.வேலு எம்எல்ஏ பேச்சு

    By திருவண்ணாமலை  |   Published on : 01st August 2016 08:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உறவுகள், பண்பாட்டைச் சொல்லிக் கொடுக்கும் ஒரே மொழி தமிழ்தான் என்று தமிழக முன்னாள் அமைச்சரும், மாவட்ட திமுக செயலருமான எ.வ.வேலு எம்எல்ஏ பேசினார்.

    முரசொலி அறக்கட்டளை சார்பில் அண்ணா பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளுக்கான பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டிகள் நடைபெற்றன. திருவண்ணாமலை - திருக்கோவிலூர் சாலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை இதற்கான தொடக்க விழா நடைபெற்றது.

    விழாவுக்கு, மாவட்ட அவைத் தலைவர் த.வேணுகோபால் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, நகரச் செயலர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட துணைச் செயலர் சி.சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இலக்கிய அணிச் செயலர் ம.பிரபாகரன் வரவேற்றார்.

    மாவட்ட திமுக செயலரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, ஒப்பித்தல் போட்டிகளைத் தொடங்கி வைத்ததுடன், போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவ - மாணவிகளுக்கும் திருக்குறள் கலைஞர் உரை புத்தகங்களை வழங்கினார்.

    தொடர்ந்து, அவர் பேசுகையில், நம்முடைய தாய்மொழி தமிழாக இருக்கலாம். ஆனால், தமிழுடன் தொடர்பு மொழியான ஆங்கிலமும் தேவை. உலகில் பல்வேறு மொழிகள் இருக்கலாம். ஆனால், நம்முடைய உறவுகள், பண்பாட்டை சொல்லிக் கொடுக்கும் ஒரே மொழி தமிழ்தான் என்றார்.

    இதில், திமுக தணிக்கைக்குழு உறுப்பினர் கு.பிச்சாண்டி, நகராட்சி குழுத் தலைவர் குட்டி க.புகழேந்தி, அனைத்து அமைப்புசாரா தொழிற்சங்கங்களின் மாவட்டத் தலைவர் எ.ஏ.ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai