Enable Javscript for better performance
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றிக்கு தொண்டர்கள் தீவிரமாக உழைக்க வேண்டும்: எம்ஜிஆர் மன்றச் செயலர் பேச்சு- Dinamani

சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றிக்கு தொண்டர்கள் தீவிரமாக உழைக்க வேண்டும்: எம்ஜிஆர் மன்றச் செயலர் பேச்சு

    By திருவண்ணாமலை  |   Published on : 01st August 2016 08:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் 100 சதவீதம் வெற்றி பெற தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அனைத்துலக எம்ஜிஆர் மன்றச் செயலர் தமிழ்மகன் உசேன் பேசினார்.

    திருவண்ணாமலை தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீத வெற்றிபெறுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன் தலைமை வகித்தார்.

    இந்து சமய அறநியைத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் எம்.எஸ்.நைனாகண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலர் எஸ்.ஆர்.தருமலிங்கம் வரவேற்றார்.

    அனைத்துலக எம்ஜிஆர் மன்றச் செயலரும், அதிமுக ஆட்சிமன்றக் குழு உறுப்பினருமான அ.தமிழ்மகன் உசேன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசுகையில், வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் 100 சதவீதம் வெற்றிபெற தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில், 6-ஆவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றதும் ஐம்பெரும் திட்டங்களில் முதல் கையெழுத்திட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட துணைச் செயலர்கள் இரா.ராஜேந்திரன், க.தவசி, எம்.எஸ்.பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai