Enable Javscript for better performance
உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக ஆலோசனைக் கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக ஆலோசனைக் கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு

    By ஆரணி  |   Published on : 01st August 2016 08:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரணியில் மாவட்ட அதிமுக மீனவரணி சார்பில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் கட்சி 100 சதவீதம் வெற்றி பெற ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    சுபான்ராவ் பேட்டை தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மீனவரணி மாநிலச் செயலர் எம்.சி.முனுசாமி தலைமை வகித்தார். இதில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியது:

    வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக 100 சதவீதம் வெற்றி பெற கட்சியினர் அனைவரும் இணைந்து கடுமையாக உழைக்க வேண்டும். மேலும், உறுப்பினர்களை அதிகளவில் கட்சியில் சேர்க்க வேண்டும். எந்தவித பாகுபாடின்றி தீவிரமாக கட்சிப் பணியாற்ற வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் வடக்கு மாவட்டச் செயலர் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சி வே.ஏழுமலை, முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெமினிராமச்சந்திரன், வே.குணசீலன், மாவட்ட துணைச் செயலர்கள் டி.கருணாகரன், ரமணிநீலமேகம், ஒன்றியச் செயலர்கள் பி.ஆர்.ஜி.சேகர், எம்.வேலு, நகரச் செயலர் அசோக்குமார், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர்கள் க.சங்கர், அ.கோவிந்தராசன், மாவட்ட பாசறைச் செயலர் ஜி.வி.கஜேந்திரன், மாவட்டக் கவுன்சிலர்கள் ஜெ.சம்பத், சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai