Enable Javscript for better performance
உள்ளாட்சித் தேர்தல்: பாமக ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சேத்துப்பட்டு தெற்கு ஒன்றிய பாமக சார்பில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் புலிவானந்தல் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு ஒன்றியச் செயலர் ஏழுமலை தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் கணேசன், மாவட்ட துணைச் செயலர் மார்கண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் தலைவர் கி.ஏழுமலை கலந்துகொண்டு பேசுகையில், வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடுபவர்களை வெற்றிபெற வைக்க கட்சியினர் பாடுபட வேண்டும். மேலும், தற்போது தேர்தல் பணிகளை கட்சியினர் தொடங்க வேண்டும் என்றார்.

    ஒன்றியத் தலைவர் ஏழுமலை, கொள்கை பரப்பு செயலர் பழனி, நகரச் செயலர் சாம்பசிவம் மற்றும் பாமக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai