Enable Javscript for better performance
காவல் நிலையம் முன் தாய், மகள் தீக்குளிக்க முயற்சி- Dinamani

சுடச்சுட

    

    காவல் நிலையம் முன் தாய், மகள் தீக்குளிக்க முயற்சி

    By திருவண்ணாமலை  |   Published on : 01st August 2016 08:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை அருகே கைது செய்யப்பட்ட மகனை விடுவிக்கக் கோரி, தாய் மற்றும் மகள் காவல் நிலையம் எதிரே தீக்குளிக்க முயன்றனர்.

    திருவண்ணாமலையை அடுத்த இசுக்கழிகாட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கோழிப் பண்ணை அதிபர் செந்தில்வேலன் (30). இவரது கோழிப்பண்ணைக்கு சில நாள்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (28), சங்கர் (26), மஞ்சுநாதன் (26) ஆகியோர் சென்றனர்.

    பண்ணை உரிமையாளர் செந்தில்வேலனைச் சந்தித்து, தங்களுக்கு செலவுக்கு பணம் கேட்டனராம். இதற்கு செந்தில்வேலன் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூவரும் சேர்ந்து செந்தில்வேலனை ஆபாசமாகத் திட்டியதுடன், கோழிப்பண்ணையை சேதப்படுத்தினராம்.

    இதுகுறித்து, வெறையூர் காவல் நிலையத்தில் செந்தில்வேலன் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், வெங்கடேசன், சங்கர், மஞ்சுநாதன் ஆகியோரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அன்று இரவு வெங்கடேசனின் தாய் நவநீதம், அவரது தங்கை ராணி ஆகியோர் வெறையூர் காவல் நிலையத்துக்கு சென்றனர்.

    பின்னர், காவல் நிலையம் எதிரே திடீரென தாங்கள் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணைய்யை உடலில் ஊற்றி தீ வைக்க முயன்றனராம். இதனை கவனித்த போலீஸார் இருவரையும் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

    அப்போது, கைது செய்யப்பட்ட வெங்கடேசனை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, போலீஸார் இருவருக்கும் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai