Enable Javscript for better performance
சேத்துப்பட்டு அருகே 2 வீடுகளில் 7 பவுன் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    சேத்துப்பட்டு அருகே 2 வீடுகளில் புகுந்து 7 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    சேத்துப்பட்டை அடுத்த ராந்தம் கிராமம், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன், விவசாயி. இவரும், இவரது மனைவி உஷாவும் சனிக்கிழமை இரவு 2 மணிக்கு வீட்டை பூட்டாமல் அருகே உள்ள விவசாய நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளனர். அதிகாலை அவர்கள் வீடுக்கு திரும்பி வந்த நிலையில், பீரோ உடைக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர், பீரோவில் இருந்த 2 பவுன் நகைகள் மற்றும் ரூ.47 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. மேலும், முருகேசனின் மைத்துனர் கன்னியப்பன் நெசவு வேலைக்காக வெளியூர் சென்றுள்ள நிலையில், அருகே உள்ள அவரது வீட்டில் 5 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பதும் தெரியவந்தது.

    இது குறித்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் முருகேசன் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் நிலைய ஆய்வாளர் செல்வி வழக்குப்பதிவு செய்து, 2 வீடுகளிலும் சேர்த்து 7 பவுன் நகைகள், ரூ.47 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai