Enable Javscript for better performance
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம்

    By வந்தவாசி/ போளூர்  |   Published on : 01st August 2016 08:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தெள்ளாறு மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் தமிழக அரசின் 2016-2017ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் பருவதம்பூண்டி கிராமத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு தெள்ளாறு மேற்கு ஒன்றியச் செயலர் வி.தங்கராஜ் தலைமை வகித்தார்.

    தெள்ளாறு கிழக்கு ஒன்றியச் செயலர் டி.வி.பச்சையப்பன், எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலர் டி.கே.பி.மணி, ஒன்றிய அவைத்தலைவர் பி.முனிரத்தினம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலர் மனோகரன் வரவேற்றார்.

    திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலர் தூசி மோகன் எம்எல்ஏ, தலைமை செயற்குழு உறுப்பினர் ஈ.பொன்னுசாமி ஆகியோர் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை விளக்கி சிறப்புரையாற்றினர்.

    ஒன்றியப் பொருளர் தனசேகரன், கல்விக்குழுத் தலைவர் எ.விஜய், தேசூர் நகரச் செயலர் முனுசாமி, ஒன்றிய துணைச் செயலர் சி.கே.பாஸ்கர், கிளைச் செயலர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இராந்தம் ஊராட்சியில்...: இதேபோல், சேத்துப்பட்டு ஒன்றியம், இராந்தம் ஊராட்சியில் அதிமுக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு ஒன்றியச் செயலர் பி.ராகவன் தலைமை வகித்தார். ஸ்ரீராமஜெயம் கல்லூரி நிர்வாகத் தலைவர் சி.ஏழுமலை, முன்னாள் தொகுதிச் செயலர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் சின்னக்குழந்தை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலர் பாண்டியன் வரவேற்றார்.

    தலைமைக்கழகப் பேச்சாளர் தமிழ்செல்வன் அதிமுக அரசின் நிதிநிலை அறிக்கையை விளக்கிக் கூறினார். மேலும், இந்தக் கூட்டத்தில் ஸ்ரீராமஜெயம் கல்லூரி நிர்வாகத் தலைவர் சி.ஏழுமலை முன்னிலையில், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட எஸ்.சி, எஸ்.டி பிரிவு  துணைத் தலைவர் எஸ்.பி.அசோக் மற்றும் சிலர் அதிமுகவில் இணைந்தனர்.

    அவர்களை அதிமுக முன்னணி நிர்வாகிகள் சி.ஏழுமலை, பி,ராகவன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். சித்தாத்துரை ரமேஷ், மனோகரன், ஊராட்சிச் செயலர்கள் கோவிந்தராஜ், சங்கர், முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன், ஒன்றிய துணைச் செயலர் வள்ளிமணி, ஒன்றியப் பொருளாளர் காளி மற்றும் ஒன்றிய நிர்வகிகள் உள்பட அதிமுகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai