Enable Javscript for better performance
நீப்பத்துறை ஆடிப்பெருக்கு விழா ஏற்பாடுகள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    நீப்பத்துறை ஆடிப்பெருக்கு விழா ஏற்பாடுகள் ஆய்வு

    By செங்கம்  |   Published on : 01st August 2016 08:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கம் அருகே ஆடிப்பெருக்கு நடைபெறவுள்ள நீப்பத்துறை சென்னியம்மன் கோயில் மற்றும் தென்பெண்ணை ஆற்றை கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி பார்வையிட்டு, சனிக்கிழமை மாலை ஆய்வு செய்தார்.

    செங்கத்தை அடுத்த நீப்பத்துறை சென்னியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 2)ஆடிப்பெருக்கு விழா நடைபெற உள்ளது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தென்பெண்ணை ஆற்றில் புனிதநீராடி சுவாமியை தரிசனம் செய்ய உள்ளனர்.

    இந்நிலையில், தற்போது ஓசூர், கிருஷ்ணகிரி மற்றும் கர்நாடாக மாநில பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், கிருஷ்ணகிரி அணை நிரம்பியுள்ளது. இதன் காரணமாக எந்த நேரத்திலும் கிருஷ்ணகிரி அணை திறந்துவிடப்படும் என்பதால், நீப்பத்துறை சென்னியம்மன் கோயில் மற்றும் அதன் அருகே பாயும் தென்பெண்ணை ஆற்றுப் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய வெள்ளத்தடுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

    அப்போது, ஆடிப்பெருக்கு விழாவுக்காக தென்பெண்ணை ஆற்றுப் பகுதியில் அமைக்கப்படும் தாற்காலிக கடைகளை ஆற்றின் கரைகளுக்கு மேல் பகுதியில் அமைக்கவும், அந்தப் பகுதியில் வெள்ள அபாய நடவடிக்கைளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    உடன், செங்கம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஷாஜித்தா, வட்டாட்சியர் காமராஜ், சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியர் ரேணுகா, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ராஜசேகர் மற்றும் நீப்பத்துறை சென்னியம்மன் கோயில் பரம்பரை அறங்காவலர்கள் செல்வரங்கன், கோகுலவாணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai