Enable Javscript for better performance
பாம்பு கடித்து பெண் சாவு: 4 நாள்களுக்குப் பிறகு சடலம் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    பாம்பு கடித்து பெண் சாவு: 4 நாள்களுக்குப் பிறகு சடலம் மீட்பு

    By தண்டராம்பட்டு  |   Published on : 01st August 2016 08:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தண்டராம்பட்டு அருகே புல் அறுக்கச் சென்ற பெண் பாம்பு கடித்து உயிரிழந்த நிலையில், அவரது சடலம் 4 நாள்களுக்குப் பிறகு மீட்கப்பட்டது.

    தண்டராம்பட்டை அடுத்த கொட்டையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வி (42). இவர், கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 27) மாலை அந்தக் கிராமத்திலுள்ள ஏரிக்கரைப் பகுதியில் கால்நடைகளுக்காக புல் அறுக்கச் சென்றுள்ளார். பின்னர், புல் அறுத்துக்கொண்டு, செல்வம் என்பவரது விவசாய நிலத்தின் அருகே வந்தபோது கலைச்செல்வியை பாம்பு கடித்ததாகத் தெரிகிறது.

    இதைத் தொடர்ந்து, அவர் பாம்புக் கடிக்கான பச்சிலையை காலில் கட்டியுள்ளார். எனினும், உடலில் விஷம் ஏறிய நிலையில், கலைச்செல்வி உயிரிழந்ததார். இந்நிலையில், அந்தப் பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை துர்நாற்றம் வந்துள்ளது. இதையடுத்து, அந்தப் பகுதிக்குச் சென்று பொதுமக்கள் பார்த்தபோது கலைச்செல்வி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

    இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் வாணாபுரம் போலீஸார் விரைந்து வந்து சடலத்தைக் கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai