Enable Javscript for better performance
பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    பேரரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட இலக்கிய அணி சார்பில் ஆரணியில் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    போட்டிக்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் வி.இரவி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக வடக்கு மாவட்டச் செயலர் ஆர்.சிவானந்தம் கலந்துகொண்டு பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    இதில், நகரச்செயலர் ஏ.சி.மணி, மேற்கு ஆரணி ஒன்றியச் செயலர் தட்சிணாமூர்த்தி, ஒன்றியச் செயலர் சுந்தர், மாவட்டப் பிரதிநிதி கே.டி.ராஜேந்திரன், துணை அமைப்பாளர்கள் மாமது, மாலா, ந.சங்கர், நெடுபாரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai