Enable Javscript for better performance
மாணவர் விடுதியில் எம்எல்ஏ ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசியை அடுத்த தேசூரில் உள்ள அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் ஞாயிற்றுக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது, விடுதி மட்டும் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு விடுதி காப்பாளரோ, சமையலர்களோ, மாணவர்களோ யாரும் இல்லை எனத் தெரிகிறது. மேலும், குறைந்த அளவு அரிசி, காய்கறி உள்ளிட்டவை மட்டுமே இருப்பு வைக்கப்பட்டிருந்ததாம்.

    இதையடுத்து, வந்தவாசி வட்டாட்சியர் எஸ்.முருகனிடம், இது குறித்து செல்லிடப்பேசி மூலமாக எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் புகார் செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

    திமுக மாவட்ட அவைத்தலைவர் கே.ஆர்.சீதாபதி, மாவட்ட துணைச் செயலர் எம்.எஸ்.தரணிவேந்தன், ஒன்றியச் செயலர்கள் டி.டி.ராதா, ப.இளங்கோவன், தேசூர் நகரச் செயலர் எச்.ஜெகன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai