Enable Javscript for better performance
மாவட்ட கபடி அணி வீரர்கள் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    மாநில அளவிலான கபடி போட்டியில் கலந்துகொள்வதற்கான திருவண்ணாமலை மாவட்ட அணிக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    புதுக்கோட்டை மாவட்டம், பரமக்குடியில் மாநில சப்-ஜூனியர் கபடிப் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் திருவண்ணாமலை மாவட்ட அணிக்கான வீரர்கள் தேர்வு மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

    இதில், மாவட்ட கபடி அணிக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பாராட்டு விழா திருவண்ணாமலை ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    விழாவுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் க.புகழேந்தி தலைமை வகித்தார். திருவண்ணாமலை மாவட்ட கபடி கழகத் தலைவர் வி.பவன்குமார், செயலர் ஆர்.ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் ஏ.முனியன், இணைச் செயலர் எம்.ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் அனைவரும் புதுக்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai