Enable Javscript for better performance
மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த செங்கம், தண்டராம்பட்டு வட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம், தண்டராம்பட்டு வட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே நடமாட வேண்டாம்.

    நீரோட்டத்தின் வேகம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் தங்களது உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பான இடத்தில் இருக்க வேண்டும்.

    குறிப்பாக, ஆகஸ்ட் 2-ஆம் தேதியன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படும் நிலையில், ஆற்றில் இறங்கி நீராடும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சா.பழனி கேட்டுக்கொண்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai