Enable Javscript for better performance
வந்தவாசி புதிய பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க பாஜக கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசி புதிய பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க பாஜக கோரிக்கை

    By வந்தவாசி  |   Published on : 01st August 2016 08:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வந்தவாசி புதிய பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் நகர பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

    வந்தவாசியில் நகர பாஜக செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகரத் தலைவர் வி.குருலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலர் டி.பாலசுப்பிரமணியன், மாவட்டப் பொருளர் என்.ராமச்சந்திரன், மாவட்ட துணைத்தலைவர் எஸ்.ரமணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணகணேசன், நகர துணைத்தலைவர் பி.விஜயகுமார், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.ஜி.துரை நாடார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், வந்தவாசி நகரில் உள்ள டாஸ்மாக் பார்களில் அதிகாலை மற்றும் நள்ளிரவு வேளைகளில் மது விற்பனை செய்வது குறித்து போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வந்தவாசி தேரடியில் உள்ள தேர்கள் பழுதடைந்துள்ளதால் புதிய தேர்கள் செய்யும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

    வந்தவாசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து பேருந்துகளும் புறப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இங்கு பயணிகள் பாதுகாப்புக்காக புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை தேவைகள் குறித்து நகராட்சி நிர்வாகம் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் நகராட்சியை கண்டித்து வரும் 18-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai