Enable Javscript for better performance
அரசுப் பள்ளிக்கு பூட்டு: பெற்றோர்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பள்ளிக்கு பூட்டு: பெற்றோர்கள் போராட்டம்

    By திருவண்ணாமலை  |   Published on : 02nd August 2016 09:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை அருகே ஆசிரியர்கள் வராததைக் கண்டித்து, அரசுப் பள்ளிக்கு பொதுமக்கள் பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம், துர்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 43 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் வனஜா, ஆசிரியர் பாலமுருகன் ஆகியோர் அண்மையில் வேறு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

    இப்போது, உமா சங்கரேஸ்வரி என்ற ஆசிரியை மட்டுமே பணிபுரிகிறார். இவரும் மகப்பேறு விடுப்பில் சென்றுவிட்டாராம். இதையடுத்து வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் சுழற்சி முறையில் இந்தப் பள்ளிக்கு வந்து பாடம் நடத்தி வருகின்றனராம்.

    இவர்களும் பல நாள்கள் பள்ளிக்கு வருவதில்லையாம். இந்நிலையில், திங்கள்கிழமை மதியம் வரை ஆசிரியர்கள் யாரும் பள்ளிக்கு வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், பள்ளிக்குப் பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து வந்த துரிஞ்சாபுரம் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வின்சென்ட் ஜெயராஜ் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சுழற்சி முறையில் வரும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சரியாக பாடம் நடத்துவது இல்லை.

    எனவே, மாணவ-மாணவிகளின் நலன்கருதி இடமாற்றம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் வனஜா, ஆசிரியர் பாலமுருகன் ஆகியோரை மீண்டும் இதே பள்ளியில் பணியமர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பெற்றோரின் கோரிக்கை கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று உதவி தொடக்கக் கல்வி அலுவலர் உறுதி அளித்தார். இதையடுத்து, பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு, பூட்டிய பள்ளியை திறந்து விட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai