Enable Javscript for better performance
இடைக்காடர் சித்தருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனை- Dinamani

சுடச்சுட

    

    இடைக்காடர் சித்தருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனை

    By திருவண்ணாமலை  |   Published on : 02nd August 2016 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி, திருவண்ணாமலையில் இடைக்காடர் சித்தருக்கு திங்கள்கிழமை சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.

    திருவண்ணாமலை, பெரிய தெருவில் உள்ள இடைக்காடர் சித்தர் குடிலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சேலம் அடுத்த ஊத்துமலை எஸ்.என்.திருஞானசம்பந்த ஈசான சிவாச்சாரியார் தலைமை வகித்தார். அலங்கரிக்கப்பட்ட இடைக்காடர் சிலைக்கு பால், தயிர், பன்னீர், பூக்கள் உள்ளிட்ட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

    தொடர்ந்து நடைபெற்ற மகா தீபாராதனையில் இடைக்காட்டு சித்தர் வழிபாட்டு மன்ற நிறுவனர் வி.டி.கோவிந்தராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு சுவாமி பிரசாதம், மூலிகைச் சாறு வழங்கப்பட்டது. சித்தர்களின் மகிமையை வெளிப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai