Enable Javscript for better performance
சதுரங்கப் போட்டி: குண்ணத்தூர் மாணவர்கள் சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    சதுரங்கப் போட்டி: குண்ணத்தூர் மாணவர்கள் சிறப்பிடம்

    By செய்யாறு  |   Published on : 02nd August 2016 09:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செய்யாறில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான சதுரங்கப் போட்டியில் குண்ணத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்கள் முதல் இரண்டு இடங்களைப் பெற்று சிறப்பிடம் பெற்றனர். 

    அனைவருக்கும் கல்வி இயக்கம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.குமார் வழிகாட்டுதலின் படி, பள்ளிகளுக்கு இடையேயான சதுரங்கப் போட்டிகள் செய்யாறு வட்டார வள மையத்தில்  அண்மையில் நடைபெற்றன.

    போட்டியில் செய்யாறு ஒன்றியத்தைச் சேர்ந்த தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    11 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் செய்யாறு ஒன்றியம், குண்ணத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்களான ப.லோகேஷ் முதலிடமும், எஸ்.விஸ்வநாத் இரண்டாமிடமும் பெற்றனர்.

     அதேபோன்று, 11 வயதுக்கு  உட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் மாணவி ஜி.ஜெய்சக்தி முதல் இடத்தைப் பெற்றார்.

    செய்யாறு ஒன்றிய உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அ.சுப்பிரமணியன், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் எஸ்.கமலக்கண்ணன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் க.சீனிவாசன் ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிப் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai