Enable Javscript for better performance
நிதிநிலை அறிக்கையில் விவசாயக் கடனுக்கு ரூ.6 ஆயிரம் கோடி: அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் பெருமிதம்- Dinamani

சுடச்சுட

    

    நிதிநிலை அறிக்கையில் விவசாயக் கடனுக்கு ரூ.6 ஆயிரம் கோடி: அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் பெருமிதம்

    By ஜங்ஷன் - intro  |   Published on : 02nd August 2016 09:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நிதிநிலை அறிக்கையில் ரூ.6 ஆயிரம் கோடி விவசாயக் கடனுக்கு வழங்குவதாக முதல்வர் அறிவித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் எனத் தெரிவித்தார் அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன்.

     ஆரணியில் அதிமுக அரசின் 2016-2017ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. பேரவை நிர்வாகி பாரி பி.பாபு தலைமை வகித்தார்.

     இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கலந்துகொண்டு பேசியது: நிதிநிலை அறிக்கை 2016-2017 வெளியிட்டதில் ரூ.6ஆயிரம் கோடி விவசாயக் கடன் வழங்குவதாக அறிவித்ததால் விவசாய பெருங்குடி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    மேலும், நிதிநிலை அறிக்கையில் அடுத்த ஓராண்டில் 5 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும், தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்துக்காக ரூ.580 கோடி ஒதுக்கீடு செய்தும், உயர்கல்வித் துறைக்கு ரூ.3679 கோடி ஒதுக்கீடு செய்தும், திறன் மேம்பாட்டு இயக்கத்துக்கு ரூ.150 கோடி, 2 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி, நகர்ப்புற வாழ்வாதார திட்டத்துக்கு ரூ.350 கோடி ஒதுக்கீடு, சாலை பாதுகாப்புக்கு ரூ.165 கோடி ஒதுக்கீடு, ரூ.422 கோடியில் காவலர்களுக்கு 2673 வீடுகள்,

    மடிக்கணினி, பாடப்புத்தகம், சீருடைக்கு ரூ.2705 கோடி ஒதுக்கீடு, காவல்துறைக்கு 6102.95 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

     தமிழ்மொழி வளர்ச்சிக்கு ரூ.32.94 கோடி ஒதுக்கீடு, 1000 கிராம கோயில்கள் சீரமைக்கப்படும்,  நிகழாண்டில் உணவு உற்பத்தி இலக்கு 147 லட்சம் மெட்ரிக் டன் என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார் என்று பேசினார்.

     கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் தூசி கே.மோகன், திரைப்பட நடிகர் ஆர்.சுந்தரராஜன், முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெமினிராமச்சந்திரன், நகர்மன்றத் தலைவர் க.ஆனந்தகுமாரி, மாவட்ட துணைச் செயலாளர்கள் டி.கருணாகரன், ரமணிநீலமேகம், ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர் அசோக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

     மேலும், ஆரணி ஒன்றிய அதிமுக சார்பில் திருவாழிநல்லூரில் ஒன்றியச் செயலாளர் பி.ஆர்.ஜி.சேகர் தலைமையில் நடைபெற்ற நிதிநிலை அறிக்கை பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கலந்துகொண்டார்.

    மாவட்ட கவுன்சிலர்கள் ஜெ.சம்பத், மாமண்டூர் சுப்பிரமணி, சேவூர் ஊராட்சித் தலைவர் பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    செங்கம்

    புதுப்பாளையம் ஒன்றிய அதிமுக சார்பில், காஞ்சியில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு ஒன்றியச் செயலாளர் புருசோத்தமன் தலைமை வகித்தார்.

    ஒன்றிய மாணவரணிச் செயலாளர் பாஸ்கரன், கிளைச் செயலாளர்கள் பாஸ்கரன், பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.

     சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்றுப் பேசினார். தொடர்ந்து அதிமுக தலைமைக்கழக பேச்சாளர் பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் பெருமாள்நகர் ராஜன், கலசபாக்கம் எம்எல்ஏ பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் நைனாக்கண்ணு ஆகியோர் பேசினர்.

    மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் லட்சுமணன், மாவட்ட கவுன்சிலர் விஜயாகுப்பன், மாவட்ட துணைச் செயலாளர் துரை, எம்ஜிஆர் மன்றச் செயலாளர் தருமலிங்கம், கலசபாக்கம் ஒன்றியச் செயலாளர் திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai