Enable Javscript for better performance
பச்சையம்மன் கோயிலில் ஆடித் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தில் உள்ள பச்சையம்மன் சமேத மன்னார்சாமி கோயிலில் ஆடி 3-ம் திங்கள் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

      இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்தனர். மேலும், பக்தர்கள் சிகை நீக்கி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

    வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள மும்முனி, அம்மையப்பட்டு, இந்திராநகர், மாம்பட்டு, ஆராசூர், செம்பூர், கீழ்சாத்தமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai