Enable Javscript for better performance
பணி நிரந்தரம் கோரி தூய்மைக் காவலர்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பணி நிரந்தரம் கோரி தூய்மைக் காவலர்கள் போராட்டம்

    By திருவண்ணாமலை  |   Published on : 02nd August 2016 09:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தூய்மைக் காவலர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி திங்கள்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதில், கலசப்பாக்கம் ஒன்றியத்து உள்பட்ட ஆதமங்கலம் புதூர், வில்வாரணி, மோட்டூர், வீரளூர், கிடாம்பாளையம், மேல்பாலூர் உள்ளிட்ட 36 கிராமங்களில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட தூய்மைக் காவலர்கள் கலந்து கொண்டனர்.

    தங்களுக்கு தொடர்ந்து பணி வழங்க வேண்டும்.

    தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி தரையில் அமர்ந்து தூய்மைக் காவலர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பின்னர், மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரை சந்தித்து முறையிடுமாறு கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் அனுப்பி வைத்தனர்.

    அதன்படி, தூய்மைக் காவலர்கள் ஆட்சியர் (பொறுப்பு) சா.பழனியைச் சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai