மதுக்கடையை: அகற்ற பாஜக கோரிக்கை
By வந்தவாசி | Published on : 02nd August 2016 09:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வந்தவாசியை அடுத்த கீழ்க்குவளைவேடு கிராமத்தில் பள்ளி அருகில் உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று வந்தவாசி ஒன்றிய பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
வந்தவாசி ஒன்றிய பாஜக செயற்குழுக் கூட்டம் சென்னாவரம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஒன்றியத் தலைவர் சி.அரிகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சுதந்தரி ஸ்ரீதர், மாவட்ட பொதுச் செயலர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய பொதுச் செயலர் சந்திரசேகரன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் வி.பாலசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வந்தவாசி ஒன்றிய கிராமங்களில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பறை கட்டிய பயனாளிகளுக்கு ஓராண்டுக்கு மேலாகியும் பணம் வழங்காமல் இருப்பது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், விதைநெல் உள்ளிட்டவற்றை விவசாயிகளுக்கு சரிவர வழங்காத வேளாண் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பழுதடைந்துள்ள வந்தவாசி-சேதராகுப்பம் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.