Enable Javscript for better performance
மாவட்ட யோகா போட்டி: வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு- Dinamani

சுடச்சுட

    

    மாவட்ட யோகா போட்டி: வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு

    By செய்யாறு  |   Published on : 02nd August 2016 09:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செய்யாறில் நடைபெற்ற மாவட்ட அளவிலான யோகா போட்டியில் வெற்றி மாணவர்களுக்கு  பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

    தமிழ்நாடு மாநில யோகா வளர்ச்சிச் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட அளவிலான யோகா போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

    செய்யாறு தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மாநில யோகா வளர்ச்சி சங்க நிறுவனர் ஜி.டி.அன்பரசன் தலைமை வகித்தார்.

     திருவண்ணாமலை மாவட்ட யோகா வளர்ச்சி சங்கத் தலைவர் பி.ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். தமிழரசி ஜெயக்குமார் குத்துவிளக்கேற்றி வைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    போட்டிகளில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய  மாவட்டங்களிலிருந்து சுமார் 360க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக் கொண்டனர். 

    5 வயது முதல் 15 வயது பிரிவுப் போட்டியில் ராந்தம் வித்யவிகாஷ் பள்ளி மாணவர்கள் 34 பேரும், வெம்பாக்கம் சுவாமி விவேகானந்தா பள்ளி மாணவர்கள் 15 பேரும், வந்தவாசி வென்குன்றம் ஸ்ரீபாரத் வித்யாலயா மாணவர்கள் 11 பேரும், பொன்னூர் சுப்பிரமணியர் பள்ளி மாணவர்கள் 10 பேரும், கலசபாக்கம் டி.பி.எஸ். வித்யாலயா மாணவர்கள் 9 பேரும் வெற்றி பெற்றனர்.

    வெற்றி பெற்ற இவர்களுக்கு உத்திரமேரூர் தொழிலதிபர் எஸ்.பரத்குமார், செய்யாறு ரிவர்சிட்டி அரிமா சங்கத் தலைவர் பி.நடராஜன் ஆகியோர் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினர்.

    நிகழ்ச்சியில் செய்யாறு அரிமா சங்கத் தலைவர் வி.தீனதயாளன், யோகா ஆசிரியர் பெருமாள், எஸ்.உமாமகேஷ்வரி, யோகா சங்க பொறுப்பாளர்கள் தண்டபாணி, தயாளன் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai