Enable Javscript for better performance
முதல்வருக்கு தமிழ்ச் சங்கம் பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    சென்னை உயர்நீதிமன்றம் என்ற பெயரை  தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று மாற்றி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு, மாவட்ட தமிழ்ச் சங்கம் பாராட்டுத் தெரிவித்துள்ளது.

    திங்கள்கிழமை நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் மெட்ராஸ் உயர்நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் என்பதையெல்லாம் மாற்றி தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்ற பெயரில் அழைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதா, தீர்மானம் ஒருமனதாக நிறைவேற ஆதரவு அளித்த அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட தமிழ்ச் சங்கம் சார்பில் அதன் தலைவர் பா.இந்திரராஜன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

    மேலும், தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று அழைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai