Enable Javscript for better performance
கேட்பாரற்று நின்ற கார் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை அருகே 2 நாள்களாக கேட்பாரற்று நின்ற காரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

    திருவண்ணாமலை நெடுஞ்சாலை, பள்ளிகொண்டாப்பட்டு கூட்டுச்சாலையோரம் கடந்த 2 நாள்களாக கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. கேட்பாரற்று நின்ற இந்த கார் குறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.

    போலீஸார் விரைந்து சென்று காரை பறிமுதல் செய்து, காவல் நிலையம் கொண்டு வந்தனர். இந்த கார் யாருடையது, எதற்காக 2 நாள்களாக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai