Enable Javscript for better performance
செய்யாறில் வேளாண் கல்லூரி அமைக்க பாஜக கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறில் வேளாண் கல்லூரி அமைக்க பாஜக கோரிக்கை

    By செய்யாறு  |   Published on : 03rd August 2016 07:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விவசாயிகளின் நலன் கருதி செய்யாறு தொகுதியில் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என பாஜக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.

    செய்யாறு நகர பாஜக செயற்குழுக் கூட்டம் தனியார் அரங்கில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்றோரை பொதுச்செயலர் பி.அருள் வரவேற்றார். நகரத் தலைவர் இராஜ.கணபதி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் கே.சுப்பிரமணி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில், செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும், செய்யாறு புறவழிச் சாலையின் இருபுறமும் தனியாக நடைபாதை அமைக்க வேண்டும், சார்-ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள மதுபானக் கடையை உடனே மூட வேண்டும், இந்தப் பகுதி விவசாயிகளின் நலன் கருதி செய்யாறு தொகுதியில் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில், மாவட்ட துணைத் தலைவர் ஆர்.மோகனம், பொருளாளர் என்.ராமச்சந்திரன், வேலூர் கோட்ட பொறுப்பாளர் ஆர்.பிரகாஷ், மாவட்ட வர்த்தக அணித் தலைவர் ஆர்.ஸ்ரீதர், நிர்வாகி பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai