Enable Javscript for better performance
தமிழக நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழக நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம்

    By ஜங்ஷன் - intro  |   Published on : 03rd August 2016 07:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தெள்ளாறு கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் தமிழக அரசின் 2016-2017ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் கொடியாலம் கிராமத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு தெள்ளாறு கிழக்கு ஒன்றியச் செயலர் டி.வி.பச்சையப்பன் தலைமை வகித்தார். தெள்ளாறு மேற்கு ஒன்றியச் செயலர் வி.தங்கராஜ், எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலர் டி.கே.பி.மணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணைச் செயலர் சி.கே.பாஸகர் வரவேற்றார்.

    திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலர் தூசி மோகன் எம்எல்ஏ சிறப்புரையாற்றினார். ஒன்றிய அவைத்தலைவர் நமச்சிவாயம், இளைஞரணி மாவட்டச் செயலர் ஜெ.ராஜேஷ்கண்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    செங்குணம் ஊராட்சியில்...: இதேபோல், போளூரை அடுத்த செங்குணம் ஊராட்சியில் தமிழக அரசின் 2016-2017ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு ஒன்றியக்குழுத் தலைவரும், ஒன்றியச் செயலருமான அ.ராஜன் தலைமை வகித்தார். கிளைக்கழகச் செயலர் ஏழுமலை முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் ராமமூர்த்தி வரவேற்றார். கூட்டத்தில் தலைமைக்கழகப் பேச்சாளர் ஜெமினி ராமசந்திரன் சிறப்புரையாற்றினார்.

    கூட்டமைப்பின் தலைவர் மனோகரன், ஊராட்சிச் செயலர் சத்தியராஜ், ஊராட்சி மன்றத் தலைவர்கள் ராஜசேகரன், சரவணன், ஒன்றியக்குழு உறுப்பினர் முனுசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    திருவண்ணாமலையில்...: திருவண்ணாமலையை அடுத்த சு.பாப்பம்பாடி கிராமத்தில் அதிமுக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை ஒன்றிய அதிமுக சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, ஒன்றியச் செயலர் ஏ.கே.குமாரசாமி தலைமை வகித்தார். ஒன்றியக்குழு துணைத் தலைவர் எஸ்.ராஜேஸ்வரி சண்முகம், ஒன்றிய மாணவரணிச் செயலர் எஸ்.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சித் தலைவர் எம்.குமார் வரவேற்றார்.

    திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலர் பெருமாள் நகர் கே.ராஜன், தலைமைப் பேச்சாளர் தஞ்சை எம்.ஜே.சங்கர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு அரசின் நிதிநிலை அறிக்கையை விளக்கிப் பேசினர்.

    கூட்டத்தில், அமைப்பு சாரா ஓட்டுநரணி துணைத் தலைவர் எம்.எம்.சேகர், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் எம்.எஸ்.நைனாகண்ணு, மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலர் எஸ்.ஆர்.தருமலிங்கம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜி.வீரமணி, கே.பழனி, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சி.காந்தி, ஏ.ஏ.ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai