Enable Javscript for better performance
திருவண்ணாமலை மரபுசார் அமைப்பு அறிமுக விழா- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மரபுசார் அமைப்பு அறிமுக விழா

    By திருவண்ணாமலை  |   Published on : 03rd August 2016 07:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் அறிமுக விழா மற்றும் மாணவர் அமைப்புத் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

    திருவண்ணாமலை மாவட்டத்தின் தொல் அடையாளங்கள், சுற்றுப்புறச்சூழல் ஆகியவற்றை காக்கும் நோக்கில் மாவட்டத்தின் தொல்லியல் ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வர்கள் இணைந்து திருவண்ணாமலை மரபு சார் அமைப்பு என்ற புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளனர்.

    அழிந்து வரும் தொல்லியல் அடையாளங்களை பாதுகாக்கும் நோக்குடன் தொடங்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் அறிமுக விழா மற்றும் திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் இதற்கான முதல் மாணவர் அமைப்புத் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

    விழாவுக்கு, கல்லூரித் தலைவர் கு.கருணாநிதி தலைமை வகித்தார். மரபுசார் அமைப்பின் தலைவர் ராஜ் பன்னீர்செல்வம் வரவேற்றார். தமிழ்நாடு தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற கல்வெட்டு ஆய்வாளர் பத்மாவதி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு மரபுசார் அமைப்பை அறிமுகப்படுத்திப் பேசினார்.

    தொடர்ந்து, திருவண்ணாமலையும், அதன் தொன்மையும் என்ற தலைப்பில் பேசிய பத்மாவதி, சங்க காலம் முதல் திருவண்ணாமலை நகரம் எவ்வாறு சிறப்புற்று விளங்கியது என்பது குறித்து விளக்கிப் பேசினார். சென்னை அண்ணா பல்கலைக்கழக நீர்வள மையத்தின் ஓய்வு பெற்ற இயக்குநர் கார்மேகம், நீர் மேலாண்மையும் அதன் இன்றைய அவசியமும் என்ற தலைப்பில் பேசினார்.

    தொடர்ந்து, அமைப்பின் இலச்சினை அஞ்சல் தலையாக வெளியிடப்பட்டது. இதை அஞ்சல் தலைகளை சேமிக்கும் பழக்கம் கொண்ட ராமலிங்கம் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து நடைபெற்ற தொல்லியல் கண்காட்சியை கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ - மாணவிகள், பொதுமக்கள் பலர் பார்வையிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai