Enable Javscript for better performance
நாடகம் பார்த்தபோது தகராறு: ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசி அருகே நாடகம் பார்த்தபோது ஏற்பட்ட தகராறில் 2 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

    வந்தவாசியை அடுத்த அதியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அன்பரசு (35), நாகலிங்கம் (47). இருவரும் அந்தக் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த கூத்து நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, இருவரும் சப்தமாக பேசினராம். இதற்கு அருகிலிருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (38) ஆட்சேபம் தெரிவித்தாராம்.

    இதனால் ஆத்திமடைந்த அன்பரசு, நாகலிங்கம், அவரது மனைவி சவுந்தர்யா, உறவினர்கள் சீனு, ரவி ஆகியோர் ரமேஷை கத்தியால் தாக்கினராம். இதனை தடுக்க வந்த ராமேஷின் அண்ணன் மகன் ராமராஜையும் (18) தாக்கினராம்.

    இதில் காயமடைந்த ரமேஷ், ராமராஜ் ஆகிய இருவரும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின்பேரில் அன்பரசு, நாகலிங்கம் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிந்த கீழ்க்கொடுங்காலூர் போலீஸார் நாகலிங்கத்தை திங்கள்கிழமை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai